மாவட்ட செய்திகள்

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி + "||" + Training for Election Officers

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துக் கூறினார். இதனையடுத்து ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜூ, தேர்தல் நடத்தும் அலுவலர் என்.விநாயகம் உள்பட துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர். அதன் பிறகு நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் முன்னேற்பாடுகளையும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.