விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்


விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2021 8:41 PM GMT (Updated: 14 Sep 2021 8:41 PM GMT)

விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

மதுரை, 
மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்து அரசுக்கு விற்பனை செய்ய தயாராக உள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நெல் மணிகளை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள விவசாயிகள் அவர்களது பகுதியின் அருகில் அமைந்துள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தாலுகா வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது. அரசுக்கு நெல் மணிகளை விற்பனை செய்ய முன்வரும் விவசாயிகள் நெல் விற்பனை செய்வதற்கு முன்பாக அவர்களது பெயர், முகவரி, பயிர் சாகுபடி செய்த கிராமம், சாகுபடி செய்த பரப்பு, அறுவடை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள காலம், பயிர் சாகுபடி செய்ததற்கான சிட்டா, அடங்கல் மற்றும் நெல் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள நெல் மூடைக் குறித்த விவரங்களுடன் விவசாயிகள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாலுகா விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களை அணுகி தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story