மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு + "||" + Salem court sentences auto driver to 10 years in prison for sexually harassing girl

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம்:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஆட்டோ டிரைவர்
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற மணிகண்டன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
பின்னர் இது குறித்து சிறுமியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்தேதி மணிகண்டனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.