சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் 9-ந் தேதி தேர்தல்-வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்


சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் 9-ந் தேதி தேர்தல்-வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 15 Sept 2021 3:58 AM IST (Updated: 15 Sept 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி தேர்தல் நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 35 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அதாவது, சேலம் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் 9-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கும், புத்தூர் அக்ரஹாரம், சிக்கனம்பட்டி, சேலத்தாம்பட்டி, கோவிந்தபாளையம், புளியம்பட்டி, அதிகாரிப்பட்டி (பெண்), வீராணம், வெள்ளார் (ஆதிதிராவிடர்), தாதாபுரம் (பெண்), கரிக்காப்பட்டி (பெண்) ஆகிய 10 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்
இதே போல கிராம ஊராட்சி வார்டு இடங்களை பொறுத்தவரை வெள்ளக்கல்பட்டி 4-வது வார்டு, புளியம்பட்டி 3-வது வார்டு, மாரமங்கலம் 2-வது வார்டு, சித்தூர் 7-வது வார்டு, பாப்பம்பாடி 6-வது வார்டு, காட்டுக்கோட்டை 12-வது வார்டு, நெடுங்குளம் 1-வது வார்டு, நீர்முள்ளிக்குட்டை 3-வது வார்டு, நெய்க்காரப்பட்டி 1-வது வார்டு, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி 1-வது, வார்டு, சி.க.மலை தெற்கு நாடு 9-வது வார்டு, பூவனூர் 4-வது வார்டு.
லக்கம்பட்டி 7-வது வார்டு, கோட்டமேட்டுப்பட்டி 5-வது வார்டு, தாசநாயக்கன்பட்டி 5-வது வார்டு, ஓலக்காசின்னனூர் 3-வது வார்டு, செலவடை 9-வது வார்டு, கீரப்பாப்பம்பாடி 4-வது வார்டு, சின்னனூர் 1-வது வார்டு, பி.நல்லாகவுண்டம்பட்டி 4-வது வார்டு, பைத்தூர் 9-வது வார்டு, நவப்பட்டி 9-வது வார்டு, மணிவிழுந்தான் 8-வது வார்டு ஆகிய 23 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கிறது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 22-ந் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்துல் ரகுமான், போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், திட்ட இயக்குனர் செல்வம் (மகளிர் திட்டம்), ஊராட்சிகள் உதவி இயக்குனர்கள் மணிவாசகம், ஷபானா அஞ்சும் மற்ற்ம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அந்த பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

Next Story