மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி + "||" + ATM Try to break the machine and loot

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர், 

சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரேம்ராஜ் (வயது 45). இவர், ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அம்பத்தூர் பட்டரவாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப சென்றபோது, அங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் பிரேம்ராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராதா கர்மாயிக் (24) என்பவர்தான் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும், ஆனால் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் தப்பிச்சென்றதும் தெரிந்தது. ராதா கர்மாயிக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.