சிம்ஸ் பூங்காவில் ஊழியர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு


சிம்ஸ் பூங்காவில் ஊழியர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Sept 2021 8:42 PM IST (Updated: 15 Sept 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

சிம்ஸ் பூங்காவில் ஊழியர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு

குன்னூர்

குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. இந்த நிலையில் பூங்காவில் உள்ள மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. நேற்று மதியம் வழங்கம் போல பாராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது தேனீக்கள் கூடு களைந்ததாக தெரிகிறது. தொடர்ந்து தேனீக்கள் பூங்காவில் இருந்த ஊழியர்களை கொட்டத்தொடங்கியது. இதனால் அவர்கள் அலறியடித்தபடி ஓடடம் பிடித்தனர். பின்னர் ஊழியர்கள் தீயை முட்டி புகைபோட்டு தேனீக்களை விரட்டினர். 

இதில், பூங்கா ஊழியர் சிவக்குமார் உள்பட பலர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story