ஓடா நிலை நொய்யல் காயர் குழுமம் சார்பில் 545 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


ஓடா நிலை நொய்யல் காயர் குழுமம்  சார்பில் 545 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
x
தினத்தந்தி 15 Sep 2021 4:20 PM GMT (Updated: 15 Sep 2021 4:20 PM GMT)

ஓடா நிலை நொய்யல் காயர் குழுமம் சார்பில் 545 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

முத்தூர்,
ஓடா நிலை நொய்யல் காயர் குழுமம்  சார்பில் 545 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்ட தொழில் மையம் மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட தென்னை நார் மற்றும் பித்துக்கட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஓடாநிலை, தம்பிரான்வலசு நொய்யல் காயர் குழுமத்தில் நேற்று காலை நடைபெற்றது
முகாமிற்கு ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்
ஜி.திருமுருகன் தலைமை தாங்கினார். ஈரோடு, திருப்பூர் மாவட்ட தென்னை நார் மற்றும் பித்துக்கட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பி.பூச்சாமி தடுப்பூசி முகாமினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். முகாமில் மொடக்குறிச்சி வட்டாரம், ஜெயராமபுரம் அரசு சுகாதாரத்துறை மருத்துவர் தலைமையிலான செவிலியர் குழுவினர் கலந்து கொண்டு ஈரோடு, திருப்பூர் மாவட்ட தென்னை நார் மற்றும் பித்துக்கட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இணைத்துள்ள நொய்யல் காயர் உட்பட 7 தென்னை நார் உற்பத்தி நிறுவன பணியாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் என மொத்தம் 545 பேருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக போட்டனர்.
முகாமில் செயலாளர் பி. தனசேகரன், சங்க உறுப்பினர்கள்சி.சாமிநாதன், கே.ஆர்.செந்தில்குமார், பி.மனோகரன்எல்.செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முத்தூர்
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. முகாமில்  மொத்தம் 125 பேருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. 
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில்  கஸ்பா பழையகோட்டை மினி கிளீனிக், நத்தக்காடையூர் அரசு ஆரம்ப பள்ளி, மருத்துவமனை வளாகம் ஆகிய 3 இடங்களில்  நடைபெற்றது. முகாமில் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்கள் என மொத்தம் 144 பேருக்கு முதல் தவணை கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி இலவசமாக போட்டனர். 

Next Story