பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


பணம்  வைத்து சூதாடிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 15 Sept 2021 10:03 PM IST (Updated: 15 Sept 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பொங்கலூர்;
பொங்கலூர் அருகே நாதே கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தேங்காய் களத்தில் காசு வைத்து சூதாடுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அங்கு திடீரென போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் 7 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்ததை கண்டு பிடித்தனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.28,580 பறிமுதல் செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட நாதேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி (வயது 60), நாகராஜ் (30), துத்தாரிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (50), கள்ளிப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் (40), கோபி (40), பழனி (40), பேச்சிமுத்து (30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.


Next Story