தூய்மை பாரத விழிப்புணர்வு பிரசார வாகனம்


தூய்மை பாரத விழிப்புணர்வு  பிரசார வாகனம்
x
தினத்தந்தி 15 Sept 2021 10:07 PM IST (Updated: 15 Sept 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை பாரத விழிப்புணர்வு பிரசார வாகனம்

திருப்பூர்:
சுதந்திர தின 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழா தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரசாரம் வாகனத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்றுகாலை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்றுகாலை நடைபெற்றது. விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கூறும்போது, ‘திருப்பூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின திருநாள் அமுத பெருவிழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த மாதம் 15-ந் தேதி முதல் அடுத்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, பாலித்தீன் கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தல், திரவ கழிவு மேலாண்மை விழிப்புணர்வு 100 நாள் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. கிராம ஊராட்சிகளின் தற்போதைய நிலை மற்றும் ஒட்டுமொத்த கிராம சுகாதார விவரம் அடங்கிய அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் தன்னார்வலர்களை கொண்டு பாலித்தீன் கழிவு மேலாண்மையை மக்களை ஈடுபடுத்தி செயல்படுத்த வேண்டும்’ என்றார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், உதவி திட்ட அலுவலர் மணிகண்டன், கண்காணிப்பாளர் பாலமுருகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story