9 விநாயகர் சிலைகள் கரைப்பு


9 விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 15 Sept 2021 10:53 PM IST (Updated: 15 Sept 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

நாகை புதிய கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் 9 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

நாகப்பட்டினம்:
நாகை புதிய கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் 9 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 
விநாயகர் சதுர்த்தி
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் இந்து முன்னணியினர், விநாயகர் குழுவினர் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில்  78 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதையடுத்து பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் அருகில் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் 3 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் அரசு தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை மீறி திட்டச்சேரி, முட்டம், வாஞ்சூர், பாப்பாக்கோவில், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட 4 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான 9 விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிலைகள் கரைப்பு
இந்த சிலைகளை இந்து அறநிலையத்துறை சார்பில் கரைப்பதற்காக முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில், பைபர் படகு மூலம் விநாயகர் சிலைகள் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இந்த பணிகளை கோவில் செயல் அலுவலர்கள் பூமிநாதன், தங்கபாண்டியன், சண்முகராஜ், சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

Next Story