சின்னசேலம் அருகே சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து
சின்னசேலம் அருகே சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து
சின்னசேலம்
சின்னசேலத்தை சேர்ந்த மணிவாசகம் மகன் ரவிசங்கர்(வயது 49). இவர் சின்னசேலம் அருகே பூண்டி கிராமத்தில் இருந்து தோட்டப்பாடி செல்லும் சாலையில் சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு சின்னசேலத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் ரவிசங்கர் தொழிற்சாலையை பூட்டி விட்டு அருகில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் உறங்கிக்கொண்டிருந்தார். இரவில் தொழிற்சாலை குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல்அறிந்து வந்த சின்னசேலம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாகவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரும், வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story