பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2021 12:14 AM IST (Updated: 16 Sept 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் உசேல் தெருவை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மனைவி கவுாி (வயது 65). இவர், வீட்டின் முன்பு உள்ள செடியில் பூக்களை பறித்து கொண்டிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கவுரி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த கவுரிக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தருமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story