திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர் கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்து உள்ளார். இதையடுத்து மாணவன் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மாணவர் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து அந்த மாணவருடன் படித்த சக மாணவர்கள், ஆசிரியர்கள் என 60 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாணவர் படித்த வகுப்பறைக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.