திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயற்சி


திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 16 Sept 2021 12:42 AM IST (Updated: 16 Sept 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை ெபட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர்

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை ெபட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நர்சிங் படித்த இளம்பெண்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார் டிரைவர் சமியுல்லா (வயது 36) இவர், அதே பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க பி.எஸ்சி., நர்சிங் படித்த இளம்பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடும்ப சூழ்நிலையால் இளம்பெண் தனது காதலை தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால் சமியுல்லா, அந்த பெண்ணிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம், எனக்கூறி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு அந்த இளம்பெண் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்கிறாயா?, இல்லையா?

இதனால் ஆத்திரமடைந்த சமியுல்லா நேற்று முன்தினம் ஒரு கேனில் 5 லிட்டர் பெட்ரோல், மற்றொரு கேனில் 10 லிட்டர் டீசலை வாங்கி கொண்டு தனது காதலியின் வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் இளம்பெண்ணின் தந்தை இல்லை. வெளியில் சென்று இருந்தார்.. தாயார் வீட்டின் பின்பக்கம் இருந்தார். இளம்பெண் ஹாலில் அமா்ந்திருந்தார்.

திடீரென வீட்டுக்குள் புகுந்த சமியுல்லா, இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா?, இல்லையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர், திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனத் திட்டவட்டமாக கூறி மறுத்துள்ளார். 

தீப்ெபட்டியை தட்டி விட்டு தப்பினார்

இதனால் ஆத்திரமடைந்த சமியுல்லா இளம்பெண்ணை தாக்கினார். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு அலறினார். மகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு தாயார் ஓடி வருவதற்குள் கேனில் இருந்த பெட்ரோலை சமியுல்லா இளம்ெபண் மீது ஊற்றி விட்டு எரித்துக் கொல்லவும், மீதியிருந்த ெபட்ரோலை தானும் உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கும் முயன்றார்.

அப்போது இளம்பெண் திடீரெனத் தீப்பெட்டியை தட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இளம்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ேசர்த்தனர். சமியுல்லாவை பிடித்து உமராபாத் போலீசில் ஒப்படைத்தனர்.

கைது

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமியுல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்தச் சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story