ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு


ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Sept 2021 12:46 AM IST (Updated: 16 Sept 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நச்சலூர்,
100 நாள் பணியாளர்கள்
நச்சலூர் அருகே உள்ள சேப்ளாப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி விமலா (வயது 40). இவர் சேப்ளாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று பணித்தள பொறுப்பாளர் விஜயலெட்சுமி, கரூர் மாவட்ட கலெக்டர் ஆய்வுக்காக வருவதால் 100 நாள் பணியாளர்கள் அனைவரும் காலை நேரமாக வருமாறு கூறியுள்ளார்.
கொலை மிரட்டல்
அப்போது அதே பகுதியை சேர்ந்த மணி மனைவி சந்திரா, பழனிசாமி மனைவி சரசு ஆகியோர் எங்கள் வீட்டில் உள்ள வேலைகளை விட்டுவிட்டு காலையில் நேரமாக வர முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவிக்கு போனில் பேசி உள்ளனர். பின்னர் சந்திரா தனது மகன் மகேந்திரனுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.இந்தநிலையில் சமுதாய கூடத்தில் இருந்த ஊராட்சி மன்ற தலைவி விமலாவை அங்கு வந்த மகேந்திரன், சந்திரா, சரசு ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், மகேந்திரன் தான் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
3 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவி விமலா குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மகேந்திரன், சந்திரா, சரசு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story