கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sept 2021 12:56 AM IST (Updated: 16 Sept 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டை சாமிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மண்டபம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அங்கு தனியாக சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மண்டபம் இந்திரா நகரைச் சேர்ந்த மரியரோஸ் (வயது53), ராமேசுவரம் அந்தோணி பிச்சை (35) எனவும், அவர்கள் வைத்திருந்த பையை பரிசோதித்த போது அதில் 2 கிலோ கஞ்சா, 2 செல்போன், ரூ.16,120 இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்து மண்டபம் இன்ஸ்பெக்டர் ஜீவா இருவரையும் கைது செய்தார்.

Next Story