மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை + "||" + Suicide

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கருப்பூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்.எஸ்.மங்கலம்,

நயினார்கோவில் அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 32). இவருடைய மனைவி காளீஸ்வரி(25). இவர்களுக்கு யாஷிஹா(4), யாஷிஹன்(2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை அடிப்பது வழக்கம். இதனால் கணவருடன் கோபித்து கொண்டு கருப்பூரில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் காளீஸ்வரி வந்து விட்டார். இந்த நிலையில் மனைவியை தேடி சென்ற பாலமுருகன் அவரிடம் தகராறு செய்ததோடு தனது மகன் யாஷிஹனை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். இதனால் காளீஸ்வரி விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வயல்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்யப்பட்டார்.
2. பள்ளி மாணவி தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
காதலுக்கு உதவி செய்யாததால் தாக்கப்பட்ட பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. முதியவர் தற்கொலை
சேத்தூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொைல செய்து கொண்டார்.
5. திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை