5 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் தொடர்புடைய 5 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை மனகாவலன் பிள்ளை நகரை சேர்ந்தவர்கள் ஆனந்தராஜ் மகன் உதேஷ்ராஜ் (வயது 22), மாரியப்பன் மகன் முத்துராமன் என்ற முத்தப்பா (19), வேல்சாமி மகன் சுப்பிரமணி (25), பொன்னாக்குடி மள்ளாக்குளத்தை சேர்ந்தவர் சம்சுதீன் மகன் முகம்மது தவுபீக் (20), நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் முகம்மது அசன் மகன் முகம்மது சமீர் (21).
இவர்கள் 5 பேரும் பாளையங்கோட்டை சமாதானபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த ராஜாசிங் டேவிட் என்பவரை, சாந்திநகர் மணிக்கூண்டு அருகே உள்ள வெட்டுவான்குளத்தில் வைத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உதேஷ் ராஜ் உள்ளிட்ட 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், பாளையங்கோட்டை உட்கோட்ட சட்டம்- ஒழுங்கு போலீஸ் உதவி கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் பரிந்துரை செய்தனர். கமிஷனர் அதனை ஏற்று, உதேஷ் ராஜ் உள்ளிட்ட 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை போலீசார், சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story