மாவட்ட செய்திகள்

தந்தை, மகளை தாக்கிய வாலிபர் மீது வழக்கு + "||" + attacked

தந்தை, மகளை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

தந்தை, மகளை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
நச்சலூர் அருகே தந்தை, மகளை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நச்சலூர், 
முன்விரோதம்
நச்சலூர் அருகே உள்ள கட்டாணி மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி விஜயா (வயது 49). அதே பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. சுப்பிரமணி வீடும், சின்னத்துரை வீடும் அருகருகே உள்ளது.
இதனால் நிலம் சம்பந்தமாக இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சுப்பிரமணி வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று சின்னத்துரை சுப்பிரமணியிடம் நிலத்தை அளந்து விட்டு வீடு கட்டுமாறு கூறினார். அதற்கு சுப்பிரமணி எத்தனை முறை நிலத்தை அளப்பது என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
தாக்குதல்
இந்தநிலையில், விஜயா வீட்டிற்குள் சின்னதுரை மகன் ஷாமு (24) அத்துமீறி நுழைந்து வீட்டில் படுத்திருந்த சுப்பிரமணியை கையால் தாக்கியுள்ளார். இதில் வலி தாங்காமல் அவர் சத்தம் போட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியின் மகள் மீனா ஷாமுவை தடுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் மீனாவையும் தாக்கியுள்ளார்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்ததும் ஷாமு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் விஜயா புகார் கொடுத்தார். இதன் பேரில் ஷாமு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டேங்கர் லாரி டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
டேங்கர் லாரி டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்
சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டார்.
3. இருதரப்பினரிடையே தகராறு; ஒருவர் மீது தாக்குதல்
இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டார்.
4. சோள வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு; தந்தை- மகன் மீது வழக்கு
சோள வியாபாரியை தாக்கி பணம் பறித்த தந்தை- மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. மனைவியை தாக்கியதாக கணவர் கைது
மனைவியை தாக்கியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.