தாக்குதல்; 2 பேர் கைது
தாக்குதல்; 2 பேர் கைது
சிவகாசி
திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்பால் (வயது 43). இவர் கடந்த 2012 திருத்தங்கல் பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவருக்கும், சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த கருப்ப என்கிற கருப்பசாமி என்பவருக்கும் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜன்பாலை, கருப்பு என்கிற கருப்புசாமி, அந்தோணி பிரசன்னா என்கிற ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜன்பால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி கனகரத்தினம் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கருப்ப சாமி (36), அருண்குமார் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story