தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரசாரம்
தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரசாரம்
விருதுநகர்
தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி ைவத்தார்.
விழிப்புணர்வு பிரசாரம்
விருதுநகரில் சூலக்கரை பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் தூய்மையே சேவை நிகழ்வை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கம் மூலம் மக்களிடையே தூய்மை, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் சுதந்திர தின அமுத பெருவிழா மற்றும் தூய்மையே சேவை எனும் நிகழ்வை இன்று முதல் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி வரை நடத்துவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் நேற்று இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் மேகநாத ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
குறும்படங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பஞ்சாயத்து யூனியன்களில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஊரகப் பகுதிகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கும் வகையிலும் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்தலை தவிர்த்திடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந் நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் திலகவதி, அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிக்குமார், உதவி திட்ட அலுவலர் கணபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story