விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு


விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 16 Sept 2021 1:27 AM IST (Updated: 16 Sept 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் வடமலைசமுத்திரம் கீழ தெருவைச் சேர்ந்தவர் சவரிராஜ். இவருடைய மகன் சாம் ரூபன் (வயது 38). இவர் நெல்லையில் உள்ள அச்சகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராஜலட்சுமி. சம்பவத்தன்று சாம் ரூபன் வடமலைசமுத்திரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் விக்கிரமசிங்கபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். சங்கரபாண்டியபுரம் பகுதியில் சென்றபோது, சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் படுகாயமடைந்த சாம் ரூபனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story