தொழிலாளி தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 44). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அழகர்சாமி காயமடைந்து அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள பெற்றோரின் வீட்டில் அழகர்சாமி தூங்க சென்றுள்ளார். அதிகாலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அழகர்சாமி கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story