மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Sept 2021 1:42 AM IST (Updated: 16 Sept 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே கல்லூரியில் படிக்க முடியாத விரக்தியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொல்லங்கோடு, 
கொல்லங்கோடு அருகே கல்லூரியில் படிக்க முடியாத விரக்தியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இந்த விபரீத சம்பவம் குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவி
கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த குமார், தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு சுமா என்ற மனைவியும், ஒரு மகனும், நந்தினி(வயது 19) என்ற மகளும் உண்டு. நந்தினி கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்தார். பின்னர், அவர் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க விரும்பினார். 
ஆனால், கொரோனா ஊரடங்கு மற்றும் வீட்டின் வறுமை நிலை காரணமாக சில மாதம் கழித்து கல்லூரியில் சேர்ப்பதாக பெற்றோர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேற்படிப்பு படிக்க முடியாததால் நந்தினி கடந்த சில நாட்களாக மனமுைடந்த நிலையில் காணப்பட்டு வந்தார். 
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் நந்தினி தூக்கில் தொங்கினார். அப்போது, அங்கு வந்த குமார் இதைகண்டு அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
 உடனே, அவர்கள் நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக பாறசாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள  ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நந்தினி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 மேற்படிப்பு படிக்க முடியாத விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story