புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழப்பாடி:
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனைமடுவு அணை
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டையில் ஆனைமடுவு அணையில் தற்போது 50.95 அடி அளவில் 131.57 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, அணையில் இருந்து நேற்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்வில் ஆத்தூர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் கவிதாராணி, புழுதிக்குட்டை ஆனைமடுவு உதவி பொறியாளர் விஜயராகவன், குருச்சி சிதம்பர உடையார் பாசன சங்கத்தலைவர் கே.பி.சண்முகம், அத்தனூர்பட்டி ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் கைலாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
9 நாட்கள்
அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முதல்ஏரி பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், தொடர்ந்து 12 நாட்களுக்கு வசிஷ்டநதியில் தண்ணீர் திறந்து விடப்படப்பட்டுள்ளது. அணை வலது மற்றும் இடது வாய்க்கால் பாசனத்திற்கு 27-ந் தேதியிலிருந்து தொடர்ந்து 9 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story