நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்


நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்
x
தினத்தந்தி 16 Sept 2021 4:30 AM IST (Updated: 16 Sept 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை
வீரபாண்டி துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பைரோஜி, பாலம்பட்டி, கோட்டக்காடு, வீரபாண்டி, வள்ளுவர் நகர், ஸஹஸ்கூல் மேடு, அக்கரப்பாளையம், லட்சுமனூர், அரியனூர், இந்திரா நகர், கார்த்திக் நகர், ரெயில்வே ஸ்டேசன்ரோடு, செக்போஸ்ட், பேக்காடு, பில்லுக்கடை மேடு, சூளைமேடு, உத்தமசோழபுரம், சத்யம் கார்டன், சித்தனேரி, ஆத்துக்காடு, கரட்டுக்காடு, பூலாவரி, சமத்துவபுரம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் நாளை  மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
இதே போல வேம்படிதாளம் துணைமின்நிலையத்திலும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடுவனேரி, ஆலங்காட்டானூர், ராமாபுரம், ரெட்டிப்பட்டி, புதுப்பாளையம், மண்காடு, ரெட்டிமாணிக்கனூர், உழப்பன் கோட்டை, கல்பாரப்பட்டி, ஏழுமாத்தனூர், நல்லணம்பட்டி, கொசவம்பட்டி, காடையாம்பட்டி, பரமகவுண்டனூர், வெள்ளைபிள்ளையார் கோவில், சாத்தாம்பாளையம், சித்தனூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று செயற்பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.
சங்ககிரி
சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ெரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல் பாளையம், சின்னாகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
கிச்சிப்பாளையம்
சேலம் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையம் மற்றும் உடையாப்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கே.என்.காலனி மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிச்சிப்பாளையம், காளியம்மன் நகர், அழகு நகர், ஜே.ஜே.நகர், காளியம்மன் கோவில், காந்திமகான் தெரு, நாராயண நகர், குமரன் தெரு, பச்சப்பட்டி, அம்மாபேட்டை மெயின் ரோடு, பட்டை கோவில், கார்பெட்தெரு, பாலாஜி நகர், வித்யாநகர், அம்மாபேட்டை, உழவர் சந்தை, சீனிவாசா தியேட்டர், மாரியப்பன் நகர், தியாகி நடேசன் 3-வது மற்றும் 4-வது தெரு, எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
18-ந் தேதி
ஓமலூர் கோட்டம் தும்பிபாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பி பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, காருவள்ளி, செம்மாண்டப்பட்டி, கொங்குபட்டி, சின்னதிருப்பதி, சிந்தாமணியூர், பஞ்சு காளிப்பட்டி, தாராபுரம், பெரியபட்டி, மரகோட்டை ஆகிய பகுதிகளில் 18-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின் உற்பத்தி, பகிர்மான கோட்ட செயற் பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story