பணம் இரட்டிப்பு செய்து தருவதாக 2 பேரிடம் ரூ.7¾ லட்சம் மோசடி- சேலம் போலீசார் விசாரணை


பணம் இரட்டிப்பு செய்து தருவதாக 2 பேரிடம் ரூ.7¾ லட்சம் மோசடி- சேலம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Sept 2021 4:34 AM IST (Updated: 16 Sept 2021 4:34 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக 2 பேரிடம் ரூ.7 லட்சத்து 82 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:
சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக 2 பேரிடம் ரூ.7 லட்சத்து 82 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் இரட்டிப்பு
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 29). இவர் சேலம் சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதத்திற்கு முன்பு தனது செல்போனுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. சம்பந்தப்பட்டவரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது பணம் செலுத்தி, கொடுக்கும் வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து கொடுத்தால் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறினார்.
இதை நம்பி பல தவணைகளில் ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் செலுத்தினேன். ஆனால் இரட்டிப்பு பணம் தரவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்டவரிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை. அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. எனவே மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மோசடி
அதேபோன்று கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த டேனியல் ராஜ்குமார் (28) என்பவரும், பணம் இரட்டிப்பு செய்வதாக கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் கட்டினேன். ஆனால் பணம் திரும்ப கிடைக்க வில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த 2 புகார்களின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது 2 பேரிடம், ரூ.7 லட்சத்து 82 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story