மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் மீதான குற்றச்சாட்டு


மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் மீதான குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Sept 2021 3:36 PM IST (Updated: 16 Sept 2021 3:36 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவிலில் நிர்வாக குறைபாடுகளுக்காக அறங்காவலர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி அரசாணை எண்-107, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை 6-8-2021-ன் படி குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்க தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து என்.சி.ஸ்ரீதர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

அரசாணையின்படி தற்காலிக பதவி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், அரசால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றக் குறிப்பாணை ஐகோர்ட்டால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இணை கமிஷனர் நிலைக்கு குறையாத அலுவலரை விசாரணை அலுவலராக நியமனம் செய்து குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை உடனே தொடங்க வேண்டும். விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கோவிலில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை பெற வேண்டும். ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர்கள், விசாரணையை விரைவில் முடிப்பதற்கு ஏதுவாக விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கொண்ட தகவல்களை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story