விலை குறைவால் செடியில் பழுத்து வீணாகும் தக்காளிகள்


விலை குறைவால்  செடியில் பழுத்து வீணாகும் தக்காளிகள்
x
தினத்தந்தி 16 Sept 2021 3:57 PM IST (Updated: 16 Sept 2021 3:57 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில், விலை குறைவால் தக்காளிகள் அறுவடை செய்யப்படாமல் செடியில் பழுத்து வீணாகின்றன.

கம்பம் :
கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் அதிகளவு தக்காளி சாகுபடி செய்து இருந்தனர். இவைகள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. இந்தநிலையில் தற்போது தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. இதனால் வியபாரிகள் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ தக்காளியை ரூ.5-க்கு கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாக வில்லை. 
இதனால் விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுள்ளனர். எனவே தக்காளிகள் செடியிலேயே பழுத்து வீணாகி வருகின்றன. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி விலை குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். தேனி மாவட்டத்தில் தக்காளி மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர். 



Next Story