தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவை 6 பேர் வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவை 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஆழ்வார்கற்குளம், ஸ்ரீமூலக்கரை, வாலசமுத்திரம், கொல்லம் பரும்பு, வேலிடுபட்டி, வெம்பூர், சின்னவநாயக்கன்பட்டி ஆகிய 7 பஞ்சாயத்து தலைவர்கள் பதவி மற்றும் 41 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
நேற்று முன்தினம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் 4 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து இருந்தனர். நேற்று 2-வது நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒருவரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் ஆக மொத்தம் 2 பேர் மட்டும் மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.
Related Tags :
Next Story