திருப்பூர் மாவட்டத்தில் 19 மாணவ-மாணவிகள், 5 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் 19 மாணவமாணவிகள், 5 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் 19 மாணவ-மாணவிகள், 5 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மேலும் 2 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொங்கல் நகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோல் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியை, ஆசிரியர் என 2 பேர், வட்டக்காட்டுபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை, சின்னாண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் என 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட பள்ளி வளாகங்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story