பண்ணைப்புரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தர்ணா


பண்ணைப்புரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 16 Sept 2021 9:50 PM IST (Updated: 16 Sept 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

பண்ணைப்புரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.

தேவாரம்:
பண்ணைப்புரம் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக 22 பேர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இதை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை 8 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உத்தமபாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மதியம் 12 மணியளவில் அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தர்ணா போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story