சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் வந்தது. அவருடைய உத்தரவின் பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கூறுகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களை ஏற்பாடு செய்யும் பெற்றோர்கள், உறவினர்கள், கலந்து கொள்பவர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story