கீழக்கரை,
கீழக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் ைசக்களில் வந்த முகமூடி கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ1¾ லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.இச்சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கீழக்கரை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் இது தொடர்பாக சின்னமாயாகுளத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), அதே ஊரை சேர்ந்த நிமல்ராஜ் (22) கீழக்கரை வடக்குத் தெருவில் வசித்து வந்த பாலமுருகன் என்ற இம்தியாஸ் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கீழக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மாயாக்குளத்தில் உள்ள ஆட்டோ திருட்டில் ஈடுபட்டது இவர்கள் தான் தெரிய வந்துள்ளது. அது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.