செம்மண் கடத்திய 2 பேர் மீது வழக்கு
செம்மண் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வெள்ளியணை,
தரகம்பட்டி அருகே உள்ள சென்னம்பட்டி குளத்தில் சிலர் செம்மண் எடுத்து கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிந்தாணிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் அங்கு சென்றபோது 2 டிராக்டர் டிப்பர்களில் செம்மண் அள்ளிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. மேலும் போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து 2 டிராக்டர் டிப்பர்களையும், 1 யூனிட் செம்மண்ணுடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் சேர்வைகாரனூரை சேர்ந்த நாகராஜ், பரமசிவம் ஆகியோர் செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story