நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 450 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 450 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல், செப்.17-
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 450 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக அதிகரித்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-465, ஐதராபாத்-423 விஜயவாடா-441, மைசூரு-452, மும்பை-470 பெங்களூரு-450, கொல்கத்தா-490, டெல்லி-455.
கறிக்கோழி கிலோ ரூ.120-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நுகர்வு அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பிறகு பொதுமக்கள் இடையே முட்டை நுகர்வு அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் பிற மண்டலங்களிலும் முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்து வருவதால் அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story