தென்காசி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
தென்காசி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் வடகரையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாயிகள் தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். நீண்டகாலமாக காட்டுயானைகள் இந்த விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 யானைகள் வயலுக்கு புகுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வடகரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 100 பேர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் யானைகளால் தங்களது பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றன. தற்போது ஊருக்கு மிக அருகில் யானைகள் வந்ததால் தங்களது உயிரை காப்பாற்ற வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் அந்த மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக இதுகுறித்து ஆலோசனை நடத்த ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில துணைத் தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். விவசாயிகள் செய்யது, அம்பியா, நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story