மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 16 Sep 2021 8:17 PM GMT (Updated: 16 Sep 2021 8:17 PM GMT)

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வேலப்பசெட்டி ஏரிக்கரையில் உள்ள செல்வவிநாயகர், செல்லியம்மன், ஸ்ரீகண்ணனூர் மகா மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி உள்ள கோவில்கள் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு, அந்த கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளும், இரவில் கும்பலங்காரமும் நடைபெற்று முதற்கால யாக பூஜையும், நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தன. நேற்று காலை நான்காம் கால யாக பூஜையும், அதைத்தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க கோவில்களின் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது மஞ்சள் நீர், நெல் தெளிக்கப்பட்டது. மூலவர்களுக்கு புனிதநீரால் அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story