கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அழிக்காலில் கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராஜாக்கமங்கலம்:
அழிக்காலில் கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள அழிக்கால் கிராமத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடத்தது.
இதையடுத்து பறக்கும் படை தாசில்தார் அப்துல்லா மன்னான், தனி வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை அழிக்கால் பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது, அங்குள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் சிறு சிறு மூடைகளில் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குளச்சல் உடையார்விளையில் உள்ள அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அங்கு ரேஷன் அரிசியை யார் பதுக்கி வைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story