பாலம் அமைக்கும் பணி தீவிரம்


பாலம் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 Sept 2021 2:22 AM IST (Updated: 17 Sept 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

பாலம் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக ராஜபாளையம், செங்கோட்டை, குற்றாலம் தென்காசி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் பாயின்ட் வழியாக வாகனங்கள் செல்லும், அதேபோல் ராஜபாளையம் வழியாக மதுரை செல்லும் வாகனங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் செல்ல சர்ச் பாயின்ட் வழியாக வருவது வழக்கம்,
இந்நிலையில் சர்ச் பாயின்ட் சாலையில் ஒரு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கி தற்போது இந்த பணி நிறைவடைந்து அந்த வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்ச் பகுதியில் மற்றொரு சாலையில் புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story