ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Sept 2021 2:25 AM IST (Updated: 17 Sept 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

செம்பட்டு
வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானங்களில் பயணிகளில் ஒரு சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சில அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டது உயர் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. அதன்அடிப்படையில் கடந்த மாதம் சுங்கத்துறை ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், சுங்கத்துறையில் பணியாற்றி வந்த 16 பேர் கூண்டோடு மாற்றப்பட்டனர். நேற்று முன்தினம் சுங்கத்துறை துணை ஆணையர் சரவணகுமார் மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டையைச்  சேர்ந்த சரவணன் (வயது 23) என்பவர் தனது உடலில் மறைத்து 840 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story