வாலிபரை கடத்தி, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டலா? மதுரை ரவுடியிடம் போலீஸ் விசாரணை


வாலிபரை கடத்தி, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டலா? மதுரை ரவுடியிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 Sept 2021 5:14 AM IST (Updated: 17 Sept 2021 5:14 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டியதாக அளித்த புகாரின்பேரில் மதுரையைச் சேர்ந்த ரவுடியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 33). இவர், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-

நான் ரெயில்வேயில் ஆட்களை வேலைக்கு சேர்ப்பது, பிற தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறேன். மதுரையை சேர்ந்த ரவுடி கணபதி என்பவர் மூலம் என்னை சிலர் கடத்திச்சென்று, அறையில் அடைத்து வைத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.15 லட்சம் தரும்படி கேட்டு மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார், விருகம்பாக்கத்தில் பதுங்கியிருந்த மதுரையை சேர்ந்த ரவுடி கணபதி என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், முத்துக்குமரன் வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கி மோசடி செய்ததால், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் கூறினர். அந்த பணத்தை திருப்பி கொடுக்கும்படிதான் அவரிடம் கூறியதாக தெரிவித்தனர்.இருதரப்பினரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை சொல்லி வருவதால் போலீசார் இரு தரப்பினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்துக்குமரன் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்தாரா? அவர் கடத்தப்பட்டது உண்மையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story