கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Sept 2021 5:35 AM IST (Updated: 17 Sept 2021 5:35 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் வசித்து வந்தவர் அருளாழி (வயது 57). தனியார் தொழிற்சாலையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 14-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருளாழி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் அருளாழியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story