திருத்தணி முருகன் கோவிலில் அன்னதான திட்டம்


திருத்தணி முருகன் கோவிலில் அன்னதான திட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2021 5:55 AM IST (Updated: 17 Sept 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவிலில் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் பசியை போக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் இலவச அன்னதான திட்டத்தை தொடங்கி வைப்பதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று சென்னையில் நடந்த விழாவில் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்ற விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எம்.பூபதி, எம்.எல்.ஏ.க்கள் எஸ். சந்திரன், ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான (பொறுப்பு) ரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story