பல மைல் தூரம் நடந்து சென்று பணி செய்ய உத்தரவிடுவதை கண்டித்து சாலை மறியல்
100 நாள் வேலைத்திட்டத்தில் பல மைல் தூரம் நடந்து சென்று பணி செய்ய உத்தரவிடுவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
100 நாள் வேலைத்திட்டத்தில் பல மைல் தூரம் நடந்து சென்று பணி செய்ய உத்தரவிடுவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பனையூர் ஊராட்சிக்குட்பட்ட ஒகையூர், அக்கூர், ஒட்டத்தாங்கல், வடக்கு மேடு உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய மேற்கண்ட ஊராட்சி தலைவராக அஞ்சலிகுப்புசாமியும், செயலராக எல்.சுரேஷ், பணித்தள பொறுப்பாளர்களாக கவிதா, மங்கைலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
அதில் அக்கூர் கிராம பொதுமக்களுக்கு மட்டும் பல மைல் தூரம் நடந்து சென்று பணி மேற்கொள்ள வேண்டுமெனப் பணித்தள பொறுப்பாளர் அறிவிப்பு செய்வதாகவும், இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பணித்தள பொறுப்பாளர்களை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆரணி-செய்யாறு சாலையில அக்கூர் கூட்ரோடு அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் சாலை மறியலை ைகவிட்டனர்.
Related Tags :
Next Story