கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
தூத்துக்குடியில் வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
நீட்தேர்வை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் வ.உ.சி. கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். இதனை முன்னிட்டு வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்ரீநாத், கல்லூரி மாணவர் சங்க நிர்வாகிகள் அருண்சோலை, அகிலேஷ், வேல்சூர்யா, கிஷோர், முகிலன், மதன், நாகராஜ், மந்திரமூர்த்தி, கதிர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story