பெண் போலீசாரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும்- சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீசாரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீசாரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
கயத்தாறு அருகே சிவஞானபுரத்தில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கந்துவட்டி புகார்
கடம்பூர், சாத்தான்குளம், தட்டப்பாறை ஆகிய பகுதியில் கந்துவட்டி புகார் வந்ததும், போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கந்து வட்டி கொடுப்பவர்களை கைது செய்துள்ளோம். போதை பொருள்களை தடுக்க தனிப்படை அமைத்தது போன்று, கந்து வட்டி பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனிப் போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. நகர்புற பகுதிகளில் இருந்து அதிகளவில் கந்து வட்டி புகார்கள் வருகின்றன. கந்து வட்டி கொடுமை இருக்க கூடிய பகுதிகளை கண்டுபிடித்து அப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். கந்து வட்டி கொடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் போலீசாரின் நலனில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீசாரின் நலனில் தனி அக்கறை செலுத்தி வருகிறோம். அவர்களது குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. பெரும்பாலான பெண் போலீசார் போக்குவரத்து பிரிவில் பணிபுரிய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் அசவுகரியம் எதுவும் இருந்தால் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தால், உடனடியாக தீர்த்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story