எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை
வேதாரண்யம் அருகே எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் கிராமம் சிறையின் காடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகன் உதயவன் (வயது26). இவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் உதயவன் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உதயவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story