விழுப்புரம் மாவட்டத்தில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பா.ம.க.வினர் அஞ்சலி
விழுப்புரம் மாவட்டத்தில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பா.ம.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம்,
இடஒதுக்கீட்டு தியாகிகள் தினம்
வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர்.
இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.
பா.ம.க.வினர் அஞ்சலி
அந்த வகையில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் அருகே கோலியனூரில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி கலந்துகொண்டு அங்குள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார்.
இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, மாநில அமைப்பு துணை செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மாநில இளைஞரணி துணை தலைவர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் வேலு, ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ், எழிலரசன், ஸ்டாலின், நகர தலைவர் ராஜா, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திண்டிவனம்
இதேபோல் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் உருவபடங்களுக்கு மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தலைமையில் பா.ம.க.வினர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜி, சட்ட பாதுகாப்பு குழு மாநில செயலாளர் பாலாஜி, திண்டிவனம் நகர செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ், வன்னியர் சங்க நகர செயலாளர் பூதேரி ரவி, மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சித்தணி மற்றும் பனையபுரம், பாப்பனப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள தியாகிகள் நினைவு இடங்களில் பா.ம.க மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் தொகுதி செயலாளர், சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேலு, சம்பத், வேல்முருகன், கார்த்திகேயன், ஏழுமலை உட்பட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி வீர வணக்கம் செலுத்தி, தியாகிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினர்.
Related Tags :
Next Story