திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பறக்கும் படை அமைப்பு


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பறக்கும் படை அமைப்பு
x
தினத்தந்தி 17 Sept 2021 11:51 PM IST (Updated: 17 Sept 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலுக்கு பறக்கும் படை அமைப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒன்றிய அளவில் வருவாய் அலுவலர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.இந்த அதிகாரிகள் சந்தேகப்படும்படியான வாகனங்களை சோதனை செய்வதோடு, நபர்களையும் அவர்கள் கொண்டுவரும் பைகளையும் சோதனையிடுவார்கள். இவர்களுக்கு உதவியாக பறக்கும்படையில் ஒரு போலீசார் உடனிருப்பர். நியமன அதிகாரிகள் சுழற்சி முறையில் 6 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்

Next Story